செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு ட்வீட்.. சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்.!! - Seithipunal
Seithipunal


அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்தார். அவர் தற்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடிகளை செய்துள்ளதாகவும் சவுக்கு சங்கர் தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக பல வீடியோக்களில் சவுக்கு சங்கர் பேசி இருந்தார். அவற்றில் அமைச்சர் செந்தில் பாலாஜி பல முறைகேடுகளை செய்து இருப்பதால் அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை செல்வார். அவர் ஊழல் செய்துள்ளார் என்று புகார்களை அடுக்கி சவுக்கு சங்கர் வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் யூடியூப் சேனல்களுக்கு அவர் அளித்த பேட்டியிலும் இதே குற்றச்சாட்டை வைத்தார்.

இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக 2 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். சவுக்கு சங்கர் தன் மீது அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்துவதை தடுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே பகிர்ந்த சமூக வலைதள பதிவுகளை நீக்க வேண்டும் எனவும், அதோடு அவர் தனக்கு எதிராக பேசிய வீடியோக்களை நீக்க வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் மீது ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி‌ பிறப்பித்த உத்தரவில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு பரப்ப கூடாது, அவருக்கு எதிராக வெளியிட்ட அவதூறுகளை நீக்க வேண்டும்.

சமூக வலைதள பதிவுகளை நீக்க வேண்டும். வீடியோக்களை நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன் வைக்கவும் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இடைக்கால தடை விழித்திருந்தார்.

இந்த நிலையில் அமலாக்கத்துறை மூலம் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த வருமான வரித்துறை ரெய்டுக்கு பின் அவர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது. செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் 17 மணி நேர சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படவே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆஞ்சியோ முடித்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி குறித்து கடந்த சில நாட்களாக சவுக்கு சங்கர் பதிவு செய்து வந்தார். இதன் காரணமாக சவுக்கு சங்கருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்ப கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar fined 1 lakh defamatory tweet against Senthil Balaji


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->