நடு இரவில் ரத்தம் சொட்ட, சொட்ட., கணவரை புரட்டி எடுத்த, அதிமுக முன்னாள் எம்பி.!
sasikala pushpa attack his third husband
அதிமுகவின் முன்னாள் எம்.பி.யான சசிகலா புஷ்பா தனது முதல் கணவரான லிங்கேஸ்வரனை விவகாரத்து செய்துவிட்டு டெல்லியை சேர்ந்த ராமசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராமசாமியும் ஏற்கனவே திருமணம் செய்தவர். சசிகலா புஷ்பாவுக்கு இது மூன்றாவது திருமணமாகும்

திருமணம் செய்து கொண்ட சசிகலா புஷ்பா மற்றும் ராமசாமி தம்பதிகளுக்குள் கடந்த சில மாதங்களாக மோதல் அதிகமாகி. சென்றவாரம், டெல்லியில் நடு இரவில் சுமார் 2 மணி அளவில் தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட சாலையில் பயந்தபடியே தலைதெறிக்க ஓடிய ராமசாமியைப் பார்த்து அதிர்ச்சியான டெல்லி நகர ரோந்து போலீஸ், ராமசாமியை பிடித்து போலீசார் விசாரித்து உள்ளனர், என் மனைவி சசிகலா புஷ்பா என்னை கடுமையா தாக்கியதாகவும், அதனால் தான் மண்டை உடைஞ்சிடிச்சின்னு விசாரணை நடத்திய போலீஸிடம் கதறியிருக்காரு ராமசாமி.

ராமசாமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் டெல்லி போலீஸ். இதனையடுத்து ஏற்கனவே ராமசாமியின் முதல் மனைவி மற்றும் மகள், தரப்பிலிருந்து புகார் வந்துள்ளது. அதில் தனது தந்தையை தாக்கிய சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமசாமியின் முதல் மனைவியின் மகள், போலீஸில் புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
English Summary
sasikala pushpa attack his third husband