விடிய விடிய நடந்த தாக்குதல்..பதிலடி கொடுத்த இந்தியா!
The attack that took place at dawn India retaliated
நாட்டில் பாதுகாப்பு சூழல் குறித்து தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ' தாக்கி அழித்தது.
மேலும் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதும் இரு தரப்புக்கும் இடையே போர் உருவாகி உள்ளது.
இந்நிலையில், இந்திய கடற்படை தாக்குதலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரபிக்கடலில் இருந்து பாகிஸ்தான் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானம் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் விமானி பிடிபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நாட்டில் பாதுகாப்பு சூழல் குறித்து தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
English Summary
The attack that took place at dawn India retaliated