இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிடமாட்டோம்; அமெரிக்க மீண்டும் உறுதி!
We will not intervene in the India-Pakistan conflict America reaffirms
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிடமாட்டோம் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ' தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கபப்ட்டது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது. இதனால், இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிடமாட்டோம் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,பதற்றத்தை தணிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமென நாம் வலியுறுத்துவோம். ஆனால், இந்த போரில் அமெரிக்கா தலையிடாது. ஏனென்றால் அடிப்படையில் இது நமது பிரச்சினை அல்ல. இந்தியா ஆயுதத்தை கைவிடவேண்டுமென அமெரிக்காவால் கூற முடியாது. ஆயுதத்தை கைவிடுங்கள் என்று பாகிஸ்தானிடமும் கூற முடியாது. ராஜாங்க ரீதியில் பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொள்வோம்' என்றார்.
English Summary
We will not intervene in the India-Pakistan conflict America reaffirms