ரெக்கார்டு பிரேக்கர் சிஎம்...! சிஎம்ஓ இன்ஸ்டா பக்கத்தில் ஒரே நாளில் 1.1 மில்லியன் பேர்...! - வியப்பில் அரசியல் களம்!
Record breaker CM 1point1 million people CMO Instagram page single day political field amazed
தமிழ்நாடு முதல்-அமைச்சர் அலுவலகம் சார்பில் செயல்பட்டு வரும் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் சமூக வலைதளங்களில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. ஒரே நாளில் மட்டும் 11 லட்சம் பேர் அந்தப் பக்கத்தை பின்தொடர்ந்திருப்பது அரசியல் வட்டாரங்களிலும் இணைய உலகிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதல்-அமைச்சரின் அரசு நடவடிக்கைகள், முக்கிய அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகள், மக்கள் நலத்திட்ட அறிவிப்புகள், அரசாணை கையொப்ப நிகழ்வுகள், பொதுமக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வடிவில் இந்த சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.
முன்னதாக, சுமார் 4 லட்சம் பின்தொடர்வோர்களுடன் இயங்கி வந்த இந்தப் பக்கம், விஜய் கடந்த மே 10-ந்தேதி தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்றதையடுத்து அதிவேக வளர்ச்சியை கண்டுள்ளது.
அதன்பின், மே 11-ந்தேதி ஒரே நாளில் மட்டும் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தப் பக்கத்தை பின்தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி, இந்த அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
அரசு நிர்வகிக்கும் ஒரு சமூக வலைதளப் பக்கம் மிகக் குறுகிய காலத்தில் இத்தகைய அபார வளர்ச்சியை எட்டியுள்ளது அரசியல் பார்வையாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது புதிய அரசின் மீது குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ள எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி, முதல்-அமைச்சர் அலுவலகத்தின் எக்ஸ் மற்றும் முகநூல் பக்கங்களிலும் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Record breaker CM 1point1 million people CMO Instagram page single day political field amazed