திமுக அரசை கலைக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது..! - ஆர்.பி உதயகுமார்..!!
RB Udayakumar said that situation developed to dissolve DMK govt
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயகுமார் "தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு சமீப காலமாக கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்படுகிறது. இதனால் தமிழர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனை தடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க நேரிடும்.

உரிய ஆதாரங்கள் இல்லாமல் வருமான வரி துறையினர் சோதனை நடத்த மாட்டார்கள். வருமானவரித்துறையினர் சோதனையை தடுத்து நிறுத்தும் அளவிற்கு திமுகவினரின் அராஜகம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எனவே திமுக அரசை கலைக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது" என செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
English Summary
RB Udayakumar said that situation developed to dissolve DMK govt