மொத்தம் 12 இடங்கள்! தேர்தல் தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! - Seithipunal
Seithipunal


வருகிற செப். 3 ஆம் தேதி மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநிலங்களவையில் 12 இடங்கள் காலியாக உள்ளது. அதில், அசாம், பிகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 இடங்களும், ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடமும் உள்ளது.

9 மாநிலங்களில் உள்ள 12 இடங்களுக்கு தற்போது தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது. அதன்படி,

ஆக. 14 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. 
ஆக. 21 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். 

வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள்:

ஆக. 26 ஆம் தேதி அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், திரிபுரா 
ஆக. 27 ஆம் தேதி பிகார், ஹரியாணா, தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற செப். 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajya Sabha Election 12 seat 2024 Sep


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->