முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்க தடை.! - Seithipunal
Seithipunal


மதுரையை சேர்ந்த ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் செய்த மனுத்தாக்களில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 73 % சொத்து சேர்த்துள்ளதாக இலஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், இலஞ்ச ஒழிப்புத்துறையினர் இராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவில் சொத்து சேர்த்து இருப்பதாகவும், இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகம் ஒரு ஆன்மீக பூமி., அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி.! - Seithipunal

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பு எழுத்துபூர்வமான பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டு இருந்தார்.

இதற்கிடையே, தனது மீதான விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில்  ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajendra balaji case judgement ban


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->