நேஷனல் ஹெரால்டு! ரூ .142 கோடி ஆதாயம் அடைந்த ராகுல், சோனியா! அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்!
Rahul Gandhi Sonia Gandhi National Herald case Enforcement Directorate report
நாட்டின் முதல் பிரதமராக இருந்த நேருவால் சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட பத்திரிகை நேஷனல் ஹெரால்டு. இதை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடனாக வழங்கியது. இந்த தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலையில், பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது.
இதற்கடுத்து, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகள் யங் இந்தியாவிடம் சென்று விட்டதாகக் கூறி சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார்.
இதனைக் கொண்டே சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை (ED) விசாரணை தொடங்கியது. சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடந்து, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசால்கோக்னே முன்பு நடந்தது. சோனியா, ராகுல் ஆகியோர் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதே நேரம், வாதங்களை உடனே தொடங்குமாறு அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கையில், "நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கம் செய்வதற்கு முன்பு இருவரும் ரூ.142 கோடி வரையிலான ஆதாயம் பெற்றுள்ளனர்" என்றது. இதனால் இருவரும் கடும் சட்ட சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.
English Summary
Rahul Gandhi Sonia Gandhi National Herald case Enforcement Directorate report