தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் குற்றங்களிலும், தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு தொடர்கிறது: அண்ணாமலை குற்றசாட்டு..! - Seithipunal
Seithipunal


தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தி.மு.க., அரசின் கடமை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அத்துடன், 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் குற்றங்களிலும் தொடர்கிறது' என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்ப்பாக அவர் அறிக்கை வெளியிட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 'அரக்கோணம் திமுக இளைஞரணி நிர்வாகியால் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

அரக்கோணம் கல்லூரி மாணவி, தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். மாணவி கொடுத்த புகாரின் கீழ், கடந்த 10ம் தேதி அன்றே வழக்குப் பதிவு செய்ததாகக் கூறும் போலீசார், இதுவரை, தி.மு.க., இளைஞரணி நிர்வாகியைக் கைது செய்யவில்லை. மாறாக, மாணவி போலீசாரிடம் கொடுத்த ஆதாரங்களை, தி.மு.க.,வினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் மாணவி குற்றம் சாட்டியிருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு ஆளான வழக்கில், மாணவி குறித்த தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு அச்சுறுத்த முயற்சித்த தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் குற்றங்களிலும் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது.

இத்தகைய சூழலில், தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தி.மு.க., அரசின் கடமை.' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai alleges that the DMKs vile activities continue in all the sexual crimes committed by the DMK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->