கேரளாவுக்கு கடத்த முயன்ற 200 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் - 3 பேர் கைது.!!
three peoples arrested for gold kidnape to kerala
கோயம்புத்தூரில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்துக்கு செல்வதற்கு வாளையாறு மற்றும் வேலந்தாவளம் உள்ளிட்ட வழித்தடங்கள் முக்கியமானதாக உள்ளன. இந்த வழித்தடங்கள் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில், கோவை வழியாக கேரளாவுக்கு பணம் மற்றும் சந்தேகத்துக்குரிய பொருட்களை கடத்தி வருவதாக கேரள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் படி, கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலந்தாவளம் என்ற இடத்தில், கேரள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் மற்றும் கொழிஞ்சாம்பாறை போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகம்படும் படி அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேரை பிடித்து போலீஸார் சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் அவர்கள் ரூ.71.50 லட்சம் பணம் மற்றும் 200 கிராம் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் கோவை தியாகி குமரன் வீதியைச் சேர்ந்த சாகர், சந்தீப், ராஜவீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், உரிய ஆவணங்களின்றி பணம், தங்கத்தைக் கொண்டு சென்றதும் தெரியவந்தது.
உடனே போலீசார் அவர்கள் மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இருந்து பணம், தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவற்றை யாருக்கு கொடுப்பதற்காக எடுத்துச் சென்றனர்? ஹவாலா பணமா? இந்தக் கடத்தலுக்குப் பின்னணியில் இருப்பது யார்? என்று போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples arrested for gold kidnape to kerala