10 விமானங்கள் திடீர் ரத்து: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி..!
10 flights suddenly canceled passengers suffer at Chennai airport
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று மாலையில் இருந்து, நள்ளிரவு வரை 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்ட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, கொச்சி, புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்ளே இவ்வாறு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு குறித்த விமானங்கள் திடீர் ரத்து செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்று இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை. நிர்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
10 flights suddenly canceled passengers suffer at Chennai airport