ஸ்பெயினில் அதிர்ச்சி: உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை..!
Advisor to former Ukrainian president shot dead by unknown assailants in Spain
உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகர் ஆண்ட்ரி போர்ட்னோவ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 2010 முதல் 2014 வரை உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவராக பணியாற்றிய இவர், விக்டர் யானுகோவிச்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தவர்.
விக்டர் யானுகோவிச் ஆட்சியின் போது ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஆண்ட்ரி போர்ட்னோவ் பின்பற்றி வந்ததோடு, உக்ரைனில் 2014-ஆம் ஆண்டு நடந்த மாபெரும் புரட்சியில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றியதில் ஆண்ட்ரி போர்ட்னோவ் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே ஆண்ட்ரி போர்ட்னோவ் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை 09.15 மணியளவில் மர்ம நபர்களால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Advisor to former Ukrainian president shot dead by unknown assailants in Spain