போலி சான்றிதழ் வழக்கு: ஐ.ஏ.எஸ்., பதவி பறிக்கப்பட்ட பூஜா கேத்கர், கொலை குற்றவாளியல்ல; முன்ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்..!
Pooja Ketkar was stripped of her IAS rank in the fake certificate case is not guilty of murder Supreme Court grants anticipatory bail
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர் என்பவர் யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது இடத்தை பிடித்து பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்து பின்னர் புனே உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன், அரசால் வழங்கப்படாத வசதிகளை அத்துமீறி பெற்றுள்ளதோடு, தனது சொகுசு காரில் அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு மற்றும் நீல சுழல் விளக்கு பயன்படுத்தியதோடு, ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை அவர் முறைகேடாக சமர்ப்பித்தது என பல புகார்களில் சிக்கினார். இதனையடுத்து அவர் பணியில் இருந்து விடுவிக்கப்ட்டதோடு, அவரின் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக யு.பி.எஸ்.சி., அளித்த புகாரின்படி டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் முன்ஜாமின் கேட்டு பூஜா கேத்கர் டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து பூஜா கேத்கர் உச்ச நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்தார். குறித்த வழக்கு பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி நாகரத்னா கூறியதாவது: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம்..? அவர் கொலை குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், போதைப்பொருள் தடுப்பு சட்டம் அல்ல என்றும், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார் எனத் தெரிவித்து, அவர் ஒன்றும் கொலை செய்யவில்லை எனக்கூறி முன்ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Pooja Ketkar was stripped of her IAS rank in the fake certificate case is not guilty of murder Supreme Court grants anticipatory bail