குடும்பத்துக்கு தலா 4 லட்சம்., ராகுல் காந்தி வெளியிட்ட வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் குறித்து சரியான புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கோவிட் காரணமாக இறந்தவர்கள் குறித்த நம்பகத்தகுந்த தகவல்களை அரசு வழங்க வேண்டும் எனவும், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை எனவும் கூறியுள்ளார்.

மேலும் மக்களின் வேதனையை குறைப்பது அரசின் கடமை என்றும் என்றும் கூறியுள்ளார். குஜராத் மாடல் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு சென்றபோது அவர்களுக்கு அங்கு இடம் கிடைக்கவில்லை என தெரிவித்ததாகவும், அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் அரசு உதவவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

10 முதல் 15 லட்ச ரூபாய் பணம் மற்றும் உறவினர்களை இழந்த போதும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும், குஜராத்தில், கொரோனா காரணமாக 10 ஆயிரம் பேர் மட்டுமே இறந்ததாக மாநில அரசு கூறுகிறது, ஆனால், உண்மையில் 3 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொரு வீடாக சென்று, இதனை உறுதிப்படுத்தி உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இன்றைய குஜராத் மாடலில், கோவிட்டால் உறவினர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ள அவர், புதிய விமானம் வாங்க பிரதமரிடம் ரூ.8,500 கோடி உள்ளது. ஆனால், கொரோனாவவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க பணம் இல்லை என்றும், கோவிட் காலகட்டத்தில், சில தொழிலதிபர்களிடம் நாடு ஒப்படைக்கப்படுவதாகவும் பல லட்சம் கோடி மதிப்பிற்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது,

ஆனால் கோவிட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi say about corona dead fund


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->