மொத்தமா 50 லட்சம் பேர் காலி., பீதியை கிளப்பும் ராகுல் காந்தி.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய் தொற்று பரவலின் இரண்டாவது அலையின் போது, நாடு முழுவதும் 50 லட்சம் பேர் பலியாகிவிட்டனர் என்று, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை நாடு முழுவதும் மூன்று கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 720 பேர் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 3 கோடியே 4 லட்சத்து 29 ஆயிரத்து 339 பேர் நோய் தொடரிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக நாடு முழுவதும் இந்த வைரஸ் தொற்றால் நான்கு லட்சத்து 19 ஆயிரத்து 21 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தநிலையில், நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலையின் போது நாடு முழுவதும் 50 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அண்மையில், இந்தியாவில் நோய்த்தொற்று பரவலின் காரணமாக உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்று ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இந்த தகவலை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், "இந்த தகவல் உண்மை. மத்திய அரசின் தவறான முடிவுகளால், கொரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலையில், நமது சகோதரிகள், சகோதரர்கள், தாய்-தந்தைமார்கள் 50 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்" என்று, அந்த பதிவில் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த பதிவுக்கு பலர் கண்டனங்களையும், சிலர் ஆதரவையும் தெரிவித்து ரீ-ட்விட் செய்துவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragulganthi tweet about corona dead counting


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal