பாஜக-வின் தேசிய தலைவராகிறார் பீகாரை சேர்ந்த நிதின் நபின்: அடுத்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்..!
Nitin Nabin is set to become the BJPs national president
பாஜக-வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இதுவரை இருந்து வந்தார். இவரது பதிவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, மாற்று தலைவர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. பீகார் மாநிலத்தில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபி கடந்த ஆண்டு பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, வருகிற 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுவார் எனத் கூறப்படுகிறது.
ஆனால், இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், நிதின் நபி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். இல்லையென்றால், பாஜக தலைமையகத்தில் தேர்தல் நடைபெறும்.

45 வயதான நிதின் நபி, மறைந்த முன்னாள் பாஜக தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நபின் கிஷோர் பிரசாத் சின்ஹா மகன் ஆவார். இவர், சித்தாந்த ரீதியாக ஆழமான வேரூன்றியவரும், அமைப்புக்கு முழுமையாக அர்ப்பணிப்பு கொண்டவருமான ஒரு ஆற்றல் மிக்க தலைவர் என்று பாஜக கருதுகிறது. அத்தோடு, இவர் ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஜே.பி. நட்டா 2019-ஆம் ஆண்டு பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அமித்-ஷாவின் தேசிய தலைவர் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், 2020 ஜனவரியில் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
English Summary
Nitin Nabin is set to become the BJPs national president