பாஜகவின் கூட்டணி உடன்பாடு இறுதியானது.! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஜேபி நட்டா.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 65 இடங்களில் போட்டியிட உள்ளதாக, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற பொதுத்தேர்தல், வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

இதில் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணி உடன்பாடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட அறிவிப்புகளும் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 65 இடங்களில் போட்டியிட உள்ளதாக, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா சற்று முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அமிர்ந்தர் சிங்கின் 'பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி' 37 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும் ஜேபி நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUNJAB ELECTION 2022 BJP ANNOUNCE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->