மாயமாகிய எம்.ல்.ஏ., மகன், சிக்கிய கடிதம்.! அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலம், திருக்கனூர் செல்லிப்பட்டு புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் அங்காளன். இவர் திருபுவனை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். 

இவரது மகன் திலகரசர். இவர் திருமணமாகாத நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திலகரசர் நேற்று பகல் 11 மணியளவில் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ அங்காளன் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் திலகரசர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், திலகரசர் எழுதி வைத்து சென்ற கடிதம் வீட்டில் சிக்கியது. அந்த கடிதத்தில் வீட்டை விட்டு தனது தாயிடம் செல்வதாக எழுதி வைத்துள்ளார். 

இது குறித்து திருக்கனூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திலகரசரை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

எம்.ல்.ஏ., மகன் காணாமல் போன விவகாரம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry mla son missing


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal