பெருமிதம்! இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்ய உள்ளேன்! - கமல்ஹாசன் - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்கள் பதவியேற்கவுள்ளனர். இதில் தி.மு.க. சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அ.தி.மு.க. சார்பில் தனபால், இன்பதுரை, மக்கள் நீதி மய்யம் சார்பில் 'கமல்ஹாசன்' ஆகியோர் நாளை பதவியேற்கவுள்ளனர்.

இதில் மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்கவுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் 'கமல்ஹாசன்' அவர்கள் இன்று டெல்லிக்கு புறப்பட்டார்.

கமல்ஹாசன்:

இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் தெரிவிக்கையில்,"இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்ய உள்ளேன்.

பெருமையோடு இன்று டெல்லி செல்கிறேன். பாராளுமன்றத்தில் கன்னிப்பேச்சு குறித்து இப்போது சொல்ல முடியாது. உங்கள் வாழ்த்துகள், மக்கள் வாழ்த்துகளுடன் டெல்லி சென்று உறுதிமொழி ஏற்க உள்ளேன்"என்று தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Proud I going to do duty given to me as an Indian Kamal Haasan


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->