கண்டன ஆர்ப்பாட்டம்! நிர்வாக சீர்கேட்டை கண்டித்து... கோஷங்களுடன் அதிமுக...!
Protest AIADMK condemns administrative corruption with slogans
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான ,"எடப்பாடி பழனிசாமி" அறிவுறுத்தல்படி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று,பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத கும்பகோணம் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, தஞ்சை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்றது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பு செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.இந்த மாநகர செயலாளர் ராம.ராமநாதன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் அசோக்குமார், சோழபுரம் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பி.எஸ்.சேகர், மாவட்ட செயலாளர் பாரதிமோகன் ஆகியோர் பங்கேற்று கும்பகோணம் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து உரையாற்றினார்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு, பாதாள சாக்கடை சுகாதார சீர்கேடு, தாராசுரம் பகுதியில் சீரற்ற குடிநீர் வினியோகம், சேதமடைந்த சாலைகள், பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவு நீர், அடிக்கடி பழுதாகும் தெரு விளக்குகள் உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பாதுகாப்பு பணியில் கும்பகோணம் கிழக்கு காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
English Summary
Protest AIADMK condemns administrative corruption with slogans