இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களை பிரிகிறார்கள் - மோடி பரபரப்பு பேச்சு..! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அரியானா மாநிலம் பிவானி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;- "மேற்கு வங்காளத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்குள் ஊடுருவியவர்களுக்கும் ஓ.பி.சி. சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். 

கடந்த 10-12 ஆண்டுகளில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்கள் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்களின் மனநிலையை பாருங்கள், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்ளாமல் ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு வழங்குவேன்.

'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகளுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் இன்று நான் உறுதியளிக்கிறேன், நான் உயிருடன் இருக்கும் வரை தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது. நான் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலாளியாக இருப்பேன். இது அரசியல் பேச்சு அல்ல" எனது வாக்குறுதி.

'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த நாட்டை விட தங்கள் வாக்கு வங்கிதான் மிகவும் முக்கியம். தங்கள் வாக்கு வங்கிக்காக அவர்கள் மக்களை பிரிக்கிறார்கள்" என்று அவர் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi speech election campaighn


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?




Seithipunal
--> -->