சீர்காழி மருத்துவமனையில் கர்ப்பிணிகள் பாதிப்பு...! -டிடிவி தினகரன் அதிரடி கோரிக்கை
Pregnant women affected Sirkazhi Hospital TTV Dhinakaran demands action
சீர்காழி அரசு தாய் சேய் நல மையத்தில் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட மர்ம ‘நோய் எதிர்ப்பு’ ஊசி -தீவிர ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும்: டிடிவி தினகரன் அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது,"மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தாய் சேய் நல மையத்தில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து ஊசி காரணமாக, திடீரென காய்ச்சல், உடல் நடுக்கம் உள்ளிட்ட கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் உடல்நலக்குறைவுக்கு காரணமாகக் தெரிவிக்கப்படும், அந்த சந்தேக மருந்து மீது உடனடி விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.அத்துடன், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதே மருந்து விநியோகிக்கப்பட்டிருந்தால் அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.மேலும், அனைத்து தாய் சேய் நல மையங்களிலும் வழங்கப்படும் மருந்துகள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே நோயாளிகளுக்கு தரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதனால், கர்ப்பிணிகளின் உயிர் பாதுகாப்பு தொடர்பான இந்த சம்பவம் மருத்துவத் துறையில் பெரும் கேள்விக்குறி எழுப்பியுள்ளது.
English Summary
Pregnant women affected Sirkazhi Hospital TTV Dhinakaran demands action