மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி.. அதிர்ச்சியில் பாஜக.. வெளியான பரபரப்பு தகவல்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் அங்கு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் தற்பொழுது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய பிரதேச சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு ஸ்மால் பாக்ஸ் இந்தியா எனும் அமைப்பு தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. இந்த கருத்துக்கணிப்பின்படி மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 124 முதல் 135 தொகுதிகளில் வெற்றி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 116 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் அதை கடந்து காங்கிரஸ் கட்சி கூடுதலாக வெற்றி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தற்பொழுது மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக 70 முதல் 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜகவை தவிர மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 14 முதல் 17 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு வங்கியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 44 சதவீதமும், பாஜக 40 சதவீதமும் மற்ற கட்சிகள் 16 சதவீதமும் வாக்கு வாங்கி பெருமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் கருத்துக்கணிப்பு படி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் மத்திய பிரதேசத்திலும் தேர்தல் தொடர்பாக வெளியாகி உள்ள இந்த கருத்துக்கணிப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் நம்பிக்கை அளித்துள்ளது. மேலும் பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pre Poll release Congress will form govet in Madhya Pradesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->