கூட்டு பிராத்தனை செய்ய அனுமதி கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
prayer religion chennai High Court order
சென்னை உயர் நீதிமன்றம் புதிய வழிகாட்டுதல்களுடன் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் முன்னோக்கிய அனுமதி இல்லாமல், எந்த மதத்தினராலும் குடியிருப்பு பகுதிகளில் கூட்டு பிரார்த்தனை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அனுமதியின்றி நடைபெறும் பிரார்த்தனை கூட்டங்களை காவல்துறை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பான வழக்கின் விசாரணையின் போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது: “சிலருக்குத் தெய்வீக உணர்வை ஏற்படுத்தும் இசை, பிறருக்கு தொந்தரவு தரக்கூடியதாக அமையக்கூடும். தனிப்பட்ட நம்பிக்கைகள், பொதுநலத்துடன் முரணாக இருக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டார்.
பிரார்த்தனைக்கான உரிமை அரசியல், மதம், சமூகம் என யாரிடத்திலும் மறுக்கப்பட முடியாத ஒரு அடிப்படை உரிமையாக இருந்தாலும், அது பிறரின் அமைதி மற்றும் உரிமைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்பது நீதிமன்றத்தின் மையக் கருத்தாகும்.
English Summary
prayer religion chennai High Court order