வேட்பாளரை நிறுத்த வேண்டாம் - ஓபிஎஸ்.,க்கு அறிவுரை கூறி, கூட்டணி கட்சி தலைவர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தேசிய ஜனனாக ஜனநாயக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி, பாஜக தலைமையில் தான் செயல்படும் என்று, அக்கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் அறிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி, பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதாக இரு தினங்களுக்கும் முன் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உடன் அதிமுகவின் (இபிஎஸ்) மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம், "பாஜக இருக்கும் பக்கமே நான் இருப்பேன். புதிய நீதிக்கட்சி இருக்கும். பாஜகவின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன், ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு நடத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம், "தேசிய ஜனநாயக கூட்டணிகள் உள்ள புதிய நீதி கட்சி, பாஜக தலைமையில் தான் செயல்படும்" என்று ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை ஓ பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினேன் என்றும் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரோடு கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வத்திடம் கூறினேன் என்றும் ஏ சி சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PNT head Advice to OPS


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal