சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினை வெளியீடு!
PMK Vanniyar Chithirai Maanadu Logo now
12 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் மே 11ம் தேதி திருவிடந்தையில் வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தும் நோக்குடன் நடைபெறும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
மாநாட்டை முன்னிட்டு பாட்டாளி சொந்தங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்படுகின்றன. மேலும், கடந்த வாரம் மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட பாடல் வெளியிடப்பட்ட நிலையில், மாநாட்டிற்கான இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினை (LOGO) வெளியிடப்படவுள்ளது.
English Summary
PMK Vanniyar Chithirai Maanadu Logo now