என் நண்பர் மதுரா டிராவல்ஸ் வி.கே.டி பாலன் மறைவு - டாக்டர் இராமதாஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal


மதுரா டிராவல்ஸ் வி.கே.டி பாலன் மறைவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரின் இரங்கல் செய்தியில், மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், எனது நண்பருமான வி.கே.டி பாலன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

உழைப்பால் உலகளந்த மனிதர் என்ற பெருமைக்கு மிகவும் பொருத்தமானவர் வி.கே.டி.பாலன்.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் திருச்செந்தூரில் பிறந்து வாழ்க்கை தேடி சென்னைக்கு வந்த அவர், தமது திறமையாலும், அயராத உழைப்பாலும் உயர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கை வழங்கியவர். அவரது உழைப்பு மற்றும் அர்ப்பணிப்ப்பு உணர்வை அங்கீகரிக்கும் வகையில் உலகின் எந்த நாட்டுக்கும் விமானத்தில் இலவசமாக பயணம் செய்யவும், விடுதிகளில் தங்கவும் அனுமதி பெற்றவர். அனைவரிடத்திலும் அன்பையும், கனிவையும் பொழிபவர். என் மீது மட்டற்ற அன்பும், மரியாதையும் கொண்டவர். பலமுறை எனது வெளிநாட்டு பயணங்களுக்கு

ஏற்பாடு செய்தவர். அவரது மறைவு சுற்றுலாத் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

வி.கே.டி.பாலன் பாலன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramadoss condolence to vkt balan death


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->