#சற்றுமுன்: தமிழகத்தில் கால் வைக்கும் முன், பிரதமர் சொன்ன முக்கிய செய்தி! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இன்று மாலையும் நாளையும், தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் நான் தூத்துக்குடிக்கு செல்வேன். 

அங்கு பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும். இதில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடமும் அடங்கும். 

இது குறிப்பாக தமிழ்நாட்டின் தென் பகுதியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து இணைப்பில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். தொடங்கி வைக்கப்படும் பிற திட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை -36-ன் 50 கி.மீ தூரத்திற்கு சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவில் 4-வழிப்பாதை, 5.16 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை-138 தூத்துக்குடி துறைமுகச் சாலையின் 6-வழிப்பாதை ஆகியவையும் அடங்கும்.

துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், வஉசி துறைமுகத்தின் வடக்குப் பகுதி சரக்குக் கப்பல் நிறுத்துமிடம் - III தொடங்கிவைக்கப்படும். போக்குவரத்து இணைப்பு, நிலைத்தன்மை மற்றும் போக்குவரத்தை எளிதாக்கும் மூன்று ரயில்வே திட்டங்களும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். 

மேலும், கூடங்குளம் அணுமின் நிலைய அலகுகள் 3 மற்றும் 4-ல் இருந்து மின்சாரத்தை வெளியே அனுப்புவதற்கான மிகப்பெரிய மின் பரிமாற்ற திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். இது தமிழ்நாட்டில் எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டடக்கலையின் ஒளிரும்  எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயில்  கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின்  ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், நாளை, ஜூலை 27 அன்று  வெகு சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது.  

முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும். ஆடித் திருவாதிரை விழாவும்  கொண்டாடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi tamilnadu Visit BJP DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->