உரிமை அடகு...கஜானா சுரண்டல்...!ஆமாம் சாமி அரசியல் முடிந்தது...!அ.தி.மு.க ஆளுநருக்கு ஸ்டாலின் நேரடி தாக்கு - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற புதிய மக்கள் நலத் திட்டத்தை தொடங்கி வைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிர அரசியல் உரையாற்றினார். மேடையில் அவர் பேசியவை, எதிர்க்கட்சிகளை நேரடியாக குறிவைக்கும் தாக்கமாக இருந்தது.

உரையில் முதலமைச்சர் கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு,"தமிழ்நாட்டின் உரிமைகளை “ஆமாம் சாமி” என்று சொல்லி அ.தி.மு.க அடகு வைத்தது என குற்றம்சாட்டினார்.

மாநிலத்தின் கஜானாவை அ.தி.மு.க ஆட்சியில் சுரண்டியதாகவும், அதன் விளைவுகளை மக்கள் அனுபவித்ததாகவும் சாடினார்.அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு அஞ்சி ஓடியது என்றும் குற்றம் சுமத்தினார்.

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோதும், திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில் தமிழ்நாடு பல துறைகளில் முதலிடம் பிடித்தது என்று பெருமிதம் தெரிவித்தார்.மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்க முடியாது என அ.தி.மு.க கூறிய நிலையில், திமுக அரசு உரிமைத்தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்தியது என சுட்டிக்காட்டினார்.

மக்களின் உயிர்களை பாதுகாக்க வீடுவீடாக சென்று சேவை செய்யும் திராவிட மாடல் அரசை உருவாக்கியுள்ளதாக கூறினார்.

பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்ற திட்டத்தில் முதல் கையெழுத்தை தானே போட்டதாக நினைவுபடுத்தினார்.முட்டுக்கட்டை போடுவதே தனது முதல் வேலை என்ற போக்கில் ஆளுநர் செயல்படுவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

பள்ளிக்கல்வி, உயர்கல்வி, போட்டித் தேர்வுகள் என அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் வெற்றிப் பாதையில் பயணிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.மக்கள் கனவுகளை கேட்டு செயல்படும் அரசாக திமுக இருப்பதாக வலியுறுத்திய முதலமைச்சரின் இந்த உரை, அரசியல் களத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pledging rights looting treasury Yes man politics over Stalin launches direct attack AIADMK and Governor


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->