தவெக மாநாட்டில் போட்டோ எடுக்க அனுமதி இல்லை!...மாநாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன? - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

மாநாட்டு திடலில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்சி கொடிகள், சீரியல் விளக்குகள், சாலை நடுவே உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் வாழை மரங்கள், 5 ஆயிரம் கரும்புகளுடன் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று மாலை மாநாட்டு திடலுக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய்,  சிறிது நேரம் ஓய்வெடுத்தார். தொடர்ந்து இரவு 9 மணியளவில் மாநாட்டு திடலுக்கு வந்த அவர், அங்கு மாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பணிகளை  சுமார் 30 நிமிடம் ஆய்வு செய்தார்.  

இதற்கிடையே, மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நாகரீகமான முறையில் வரவேண்டும் என்றும்,  குறிப்பாக மாநாட்டுக்கு பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். அவர்களது பாதுகாப்பை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு தவெக கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மாநாட்டிற்கு வருகை தருவோருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவைகள் பின்வருமாறு, மாநாட்டிற்கு வருவோர், மற்ற அரசியல் கட்சிகளின் கொடிகள் மற்றும் பேனர்களை எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், செல்பி ஸ்டிக் பயன்படுத்த கூடாது. வீடியோ, பிளாஷ் பயன்படுத்தி போட்டோ எடுக்க அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொண்டர்கள் மது அருந்திவிட்டு வருகை தரக்கூடாது, சட்டவிரோத பொருட்களை கொண்டு வரக் கூடாது என்றும் மாநாட்டிற்கு வருகை தருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Photography is not allowed at the tvk conference what are the restrictions imposed at the conference


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->