பால் தினகரன்., காருண்யா ஐடி ரெய்டு.! சிக்கியது என்ன? வெளியான பரபரப்பு தகவல்.!
paul dhinakaran it raid
இயேசு அழைக்கிறார் என்ற மத பிரச்சார அமைப்பை நடத்தி வரும் பால் தினகரன் இல்லம் உட்பட 28 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கியமாக கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானவரி ஏய்ப்பு & வெளிநாட்டு வருவாய், முதலீடு மறைப்பு புகாரின் பெயரில் ஏசு அழைக்கிறார் குழுமத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கோவை லட்சுமி மில் அருகே உள்ள காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் வளாகத்திலும் சோதனை நடைபெறுகின்றது

பால் தினகரன் ‘இயேசு அழைக்கிறாா்’ என்ற பெயரில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறாா். பால் தினகரனுக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது வந்த வரி ஏய்ப்பு புகாா்களின் அடிப்படையில் 28 இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினர்.
மூன்றாவது நாளாக சென்னை, கோவை உள்ளிட்ட 25 இடங்களில் மூன்றாவது சோதனை நடைபெற்று வருகிறது.

பால் தினகரன் கிறிஸ்தவ மத பிரசாரத்துக்கு வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் நன்கொடையை குறைத்துக் காட்டியும், செலவினத்தை அதிகமாகக் காட்டியிருப்பதும் வருமான வரித் துறை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிடைத்த பணத்தை வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட பணம், நகை, ஆவணங்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..