போர் எதிரொலி - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒத்திகை.!!
war rehearsel in tirupathi temple
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆக்டோபஸ் படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தி பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில், ஆக்டோபஸ், காவல்துறை, உளவுத்துறை, பாதுகாப்புத் துறைகள், வெடிகுண்டு தடுப்பு மற்றும் மோப்ப நாய் படையைச் சேர்ந்த சுமார் 130 பணியாளர்கள் பங்கேற்றனர்.
மேலும், ஒத்திகையில் ஈடுபட்டவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஏழுமலையான் கோவில், தங்கும் விடுதிகள், பேருந்து நிலையம் போன்ற நெரிசலான பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் விசாரிக்கப்பட்டு, அவர்களின் பொருட்கள் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்று ஆக்டோபஸ் படை பிரிவின் துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளதாவது:- "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ஆக்டோபஸ் படை வீரர்கள் விழிப்புடன் உள்ளனர். ஆக்டோபஸ் படை வீரர்கள் பக்தர்களுக்கான முழு பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.
திருமலையில் உள்ள மத்திய வரவேற்பு மையம், அரசு பேருந்து நிலையம், ஏழுமலையான் கோவில், நந்தகம் தங்கும் விடுதி பகுதி, மங்களம் பாய் காட்டேஜ், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை உள்ளிட்ட முக்கிய இடங்களை ஆக்டோபஸ் படை வீரர்கள் தீவிரமாக கண்காணித்து திருமலை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதைதவிர திருமலையில் உள்ள மடங்கள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் உள்ளூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வாகனங்கள் தினமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
war rehearsel in tirupathi temple