சென்னையில் உலகத்தரத்தில் அதி நவீன அழகு மையம் திறப்பு!
A world class ultra modern beauty center opens in Chennai
சென்னையில் பூரண அழகு மற்றும் ஆரோக்யத்திற்கான ஒரு புதிய அதிநவீன மையம்- பயோ ரிவைவ், போயஸ் கார்டன் பகுதியில் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரமாண்ட விழாவில் திறக்கப்பட்டது.
இந்த மையத்தில், மேம்பட்ட தொழில்நுட்பமுடன் கூடிய, அதிநவீன சிகிச்சைகள் மற்றும் அழகு பராமரிப்பு உபகரணங்கள் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு, முழுமையான அழகு மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கு வழி வகுக்கிறது.
மருத்துவர், தொழில்முனைவோர் என்று பன்முக ஆளுமையாக திகழும் டாக்டர் ஐஸ்வர்யா செல்வராஜ் அவர்களின் புதிய முயற்சியான பயோ ரிவைவ் , அனைத்து பெண்களுக்குமான நவீன நலவாழ்வு சேவைகளை எளிதாகக் கொண்டு சேர்க்கும் முயற்சி என்று அறிமுகம் செய்தார். “அழகு என்பது உடல் மற்றும் மனதின் சமநிலையில்தான் தொடங்குகிறது” என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடைய டாக்டர் செல்வராஜின் மற்றுமொரு புதிய பிரயத்தனம்- பயோ ரிவைவ்.
Alma Soprano Titanium Laser, Hollywood Spectra Laser போன்ற பல்வேறு அதி நவீன அழகு மற்றும் சீரமைப்பு தொழில் நுட்பங்களை தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்திய பெருமை டாக்டர் செல்வராஜையே சாரும். மேலும், இந்தியாவில் முதன்முறையாக, மற்றும் SAARC பிராந்தியத்தில் முதன்முறையாக Alma PrimeX போன்ற நவீன சிகிச்சைகளை கொண்டு வந்தவரும் அவரே. இந்நிலையில், பயோ ரிவைவ் என்பது தோல் சிகிச்சை மட்டுமல்லாமல், உடல் மற்றும் உள்ளார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று விவரித்தார்.
“இந்தத் தொடக்கம் ஒரு பெரும் கனவின் நிறைவு ஆகும்,” என டாக்டர் ஐஸ்வர்யா கூறினார். “இங்கு அழகு பராமரிப்பு சிகிச்சைகள் வழங்குவதோடு நில்லாமல், மக்கள் தங்களுடைய உடல், அழகு மற்றும் நம்பிக்கையை மீண்டும் பூரணமாக கண்டடைய ஒரு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கியுள்ளோம்.”
6KE by Vishranthi, போயஸ் கார்டன், சென்னையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில் முன்னணி வாழ்க்கைமுறை ஊடகங்கள், நலவாழ்வு வழிகாட்டிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
புத்துணர்வும் குதூகலமும் ததும்பிய இந்நிகழ்வில், குன்றா இளமையின் உருவகமாகக் கருதப்படும் நட்சத்திரம், மலைகா அரோரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது தனி சிறப்பு. “ஆரோக்கியமான வாழ்வு என்பது ஓர் ஆடம்பரம் அல்ல; அது ஒரு வாழ்க்கைமுறை” என்று வற்புறுத்தி உரை ஆற்றிய அரோரா அணைத்து விருந்தினர்களின் கவனத்தை கவர்ந்தார்.
கீழ்க்காணும் பல்வேறு நவீன சிகிச்சைகளை பயோ ரிவைவில் வழங்கப் படுகின்றன:Hollywood Spectra Laser – இந்தியாவில் முதன்முறையாக, தோல் பிரகாசம் மற்றும் புத்துணர்வு பெற;
Alma Soprano Titanium – வலியற்ற லேசர் முடி அகற்றல்;
AVACEN Therapy, Cryosculpting, Hydrafacials, EMSlim, Oligoscan, IV டிரிப், கொலாஜன் படுக்கை, ஹைபர்பாரிக் ஆக்சிஜன் சிகிச்சை, கம்பிரஷன் சிகிச்சை மற்றும் பல நவீன சிகிச்சைகள் மற்றும் வசதிகள் இங்கு வழங்கப்படும். ஒவ்வொரு சிகிச்சை முறையும் FDA அங்கீகாரம் பெற்றதோடு, தோல் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் மூல காரணிகளான, உடல் வெப்பம், மனஅழுத்தம், குடல் சீர்கேடு மற்றும் சோர்வை தீர்க்கும் வகையில் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயோ ரிவைவின் பிரதான சிகிச்சை தத்துவமான ‘ஆண்டி-இன்ஃப்ளமேட்டரி டயட் பிளான்’ , உடல் உஷ்ணத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, ஹார்மோன்களை சமநிலைபடுத்தி, தோல் ஆரோக்கியத்தை உயர்த்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
நான்கு முன்னணி மருத்தவர்களின் மற்றும் ஒரு சிறந்த பிளாஸ்டிக் சர்ஜன் கொண்ட மருத்துவர் குழு பயனாளிகளுக்கு சிறந்த மற்றும் தனித்துவம் வாய்ந்த சிகிச்சையை வழங்கிட காத்துள்ளது .
விழாவில் அமைக்கப்பட்டிருந்த சுவானுபவ மண்டலங்களில், இவர்களின் தனிப்பட்ட மற்றும் தனித்துவம் வாய்ந்த சிகிச்சை முறையை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. இங்கு விருந்தினர்களுக்கு சிகிச்சை டெமோக்கள், உணவுமுறை ஆலோசனைகள் மற்றும் தோல் பரிசோதனைகள் வழங்கப்பட்டன.
English Summary
A world class ultra modern beauty center opens in Chennai