பரிதாபங்கள் சேனலுக்கு எதிராக கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
parithabangal Gopi sudhakar Kavin case
யூடியூப் தளத்தில் நகைச்சுவை வழியாக சமூகச் சிந்தனைகளைப் பகிர்ந்து வருபவர்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்களின் 'பரிதாபங்கள்' என்ற சேனல் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான ‘சொசைட்டி பாவங்கள்’ என்ற வீடியோ இணையத்தில் பரவலாக கவனம் பெற்றது.
இந்த வீடியோ நெல்லை கவின் ஆணவக் கொலை சம்பவத்தை மையமாகக் கொண்டு சமூக விழிப்புணர்வை வெளிப்படுத்தியது. இது பெருமளவு விவாதங்களை கிளப்பியது. ‘‘வீடியோ டெலிட் ஆகும் முன்னே பார்த்துவிடுங்கள்’’ என நெட்டிசன்கள் பரவலாக பகிரப்பட்டது.
இந்நிலையில், பரிதாபங்கள் சேனலுக்கு எதிராக கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தனுஷ்கோடி புகார் மனு அளித்துள்ளார். அதில், நெல்லை சம்பவத்தில் ஏற்பட்ட குடும்ப மோதலை சமூக மோதலாக சித்தரிக்கும் வகையில் வீடியோ அமைந்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
முன்னதாக கடந்த காலத்தில் திருப்பதி லட்டு தொடர்பான வீடியோக்களும் பரிதாபங்கள் சேனலுக்கு பெரும் வரவேற்பை அளித்திருந்தன. ஆனால் சமீபத்திய வீடியோ பாஜகவின் அழுத்தத்தால் அகற்றப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் கூறப்பட்டது.
English Summary
parithabangal Gopi sudhakar Kavin case