பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் வேலையில் சேர சிறப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


NAPS எனப்படும் தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பாக, நாமக்கல் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், வளாகத்தில் நடைபெற உள்ளது.

கல்வித்தகுதி:- 

அரசு அல்லது தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐ.டி.ஐ பயின்று வெற்றிகரமாக பயிற்சியினை நிறைவு செய்து இதுநாள் வரைக்கும் தொழிற்பழகுநர் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள் இந்த முகாமில் பங்கு பெறலாம். 

தேவையான ஆவணங்கள்:- 

கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ- 2, ஆதார் அட்டை, தேசிய அல்லது மாநில தொழிற்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்று தொழிற்பழகுநர்களாக சேர்ந்து பயன்பெறலாம்.

இந்த முகாம் குறித்து மேலும் விவரங்கள் அறியும் பொருட்டு உதவி இயக்குநர். மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மூன்றாம் தளம், அறை எண் -304-306, மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், நாமக்கல் -637003 அவர்களை நேரிலும் மற்றும் தொலைபேசி (04286-290297, 94877 45094) வாயிலாகவும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

national prime minister apprentice job


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->