தைரியம் இருந்த தமிழ்நாட்டுக்கு வந்து அதை சொல்லுங்க.. மோடிக்கு ஸ்டாலின் சவால்!
PM Modi BJP DMK MK Stalin
தருமபுரி திமுக எம்.பி. மணியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் உரையாற்றிய அவர், தற்போதைய அரசியல் சூழலைத் தொடந்து பல முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதி, S.I.R. என்ற பெயரில் வாக்காளர்களின் உரிமையை பறிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவது மிக அவசியம். பீகாரில் S.I.R. அறிமுகப்படுத்தப்பட்டபோது அதற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது தமிழகம் தான் என்பதை மறக்கக்கூடாது.
நேற்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துகளை தமிழ்நாட்டில் வந்து சொல்ல முடியுமா? அதற்குத் தைரியம் உண்டா? எனக் கேட்டார். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் மீது பிரதமர் தனது பேச்சில் வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“தமிழகத்தில் திமுகவின் 2.0 ஆட்சி அமைந்துவிட்டது என்றே தேர்தல் முடிவு வெளியாகும் நாளின் தலைப்புச் செய்தியாக இருக்கும்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
English Summary
PM Modi BJP DMK MK Stalin