இதுக்கு பாகிஸ்தானில் அணுகுண்டு விழுந்து இருக்கலாம் - எதுக்கு தெரியுமா?! இவரே இப்படி சொல்லிட்டாரே.!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் ஆட்சி திருடர்களின் கைகளில் சிக்கியதற்கு பதில், அணு குண்டு விழுந்திருக்கலாம் என்று, அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நாடாளுமன்றத்தில் வைத்து கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள இம்ரான் கான், "ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின் அரசின் செயல்பாடுகளை மட்டுமே பேச வேண்டும். ஊழல் குறித்து கதைக் கதையாக கூற தேவையில்லை.

பாகிஸ்தான் ஆட்சி தற்போது திருடர்களின் கைகளில் சிக்கியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் நாட்டில் அணு குண்டு விழுந்திருக்கலாம். நீதிமன்றம் உட்பட நாத்தின் அனைத்து இடங்களிலும் கிரிமினல்களின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது.

உங்களின் சுய லாபத்திற்காக, பிரதமர் ஆகவேண்டும் என்ற ஆசைக்காக 11க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து என்னை அதிகாரத்தை விட்டு நீக்கி உள்ளீர்கள்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை நோக்கி 20 லட்சம் மக்களை திரட்டி உண்மையான சுதந்திரத்தை பெறவுள்ளேன். இந்த மக்கள் பேரணியை யாராலும் தடுக்க முடியாது" என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakstan govt issue


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal