இன்ஸ்டாகிராமில் தொடங்கிய பழக்கம்: காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி... பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்...!
habit that started Instagram student who ran away her boyfriend letter that caused stir
கோவையை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதி முடித்திருந்தார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் கரூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் நெருக்கமான காதலாக மலர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் மாணவி இடையறாது செல்போன் பயன்படுத்தி வந்ததை கவனித்த பெற்றோர், அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த மாணவி, காதலனுடன் செல்ல தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், “நான் காதலனுடன் செல்கிறேன்… என்னை யாரும் தேட வேண்டாம்” என்று உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்தக் கடிதத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் அறிமுகமான இடங்களில் தீவிரமாக தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரது செல்போனும் அணைக்கப்பட்ட நிலையில் இருந்ததால் பரபரப்பு அதிகரித்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவலர்கள் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் தனது காதலனை சந்திக்க மாணவி பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அந்த பேருந்து திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சென்றபோது திடீரென பழுதாகி நின்றது. பின்னர் பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த சமயத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்ட மாணவி, காதலனை பார்க்க செல்லாமல் மீண்டும் கோவைக்கு திரும்ப தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவியின் செல்போன் எண்ணை அடிப்படையாக வைத்து தேடிய காவலர்கள், அவர் கோவைக்கு திரும்பி வருவதை அறிந்தனர். உடனடியாக சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு விரைந்த காவலர்கள், மாணவியை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அவருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
habit that started Instagram student who ran away her boyfriend letter that caused stir