வேலூரில் அதிகாலை விபரீதம்...! கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்து...! - பின்னணி என்ன...?
Early morning accident Vellore bus lost control and fell ditch What background
பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டு வந்துகொண்டிருந்தது.

இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
கண் இமைக்கும் நேரத்திற்குள் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, சாலையோரத்தில் இருந்த ஆழமான பள்ளத்தில் பாய்ந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கொடூர விபத்தில் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி 20 பயணிகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் போலீசாரும், மீட்புக்குழுவினரும் பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Early morning accident Vellore bus lost control and fell ditch What background