பஹல்காம் தாக்குதல்: கேள்வி கேட்ட காஷ்மீர் பத்திரிகையாளருக்கு அடி, உதை!
Pahalgam attack BJP Protest Journalist attack
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து கதுவாவில் பாஜகவினால் நடத்தப்பட்ட போராட்டத்தில், செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்டவர் டைனிக் ஜாக்ரன் நாளிதழின் செய்தியாளர் ராகேஷ் சர்மா.
26 பேரை பலிகொண்ட தாக்குதலைக் கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் தேவிந்தர் மான்யால், ராஜீவ் ஜஸ்ரோதியா, பாரத் பூஷன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. அதன்போது, புலனாய்வுத் துறை மற்றும் மத்திய அரசின் தோல்வியே இந்த தாக்குதலுக்குப் பின்னணியா? என்ற கேள்வியை ராகேஷ் சர்மா உள்ளிட்டோர் எழுப்பினர்.
இதனால் பாஜக எம்எல்ஏக்கள் வெகுஆக்ரோஷம் காட்டினர். அதனைத் தொடர்ந்து, பாஜக தொண்டர்கள் அவரை மத்தியில் வைத்து தாக்கினர். போலீசார் வந்தபோதுதான் தாக்குதல் முடிவுக்கு வந்தது.
சம்பவம் குறித்து கதுவா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஷாஹிதி சவுக் மற்றும் ஜம்மு பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஊடக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்திரிகையாளர் மீதான இந்த வன்முறை ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
English Summary
Pahalgam attack BJP Protest Journalist attack