சத்தீஸ்கரில் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் போராட்டம்: ஒரே நாளில் 14, 678 பேர் ராஜினாமா செய்து அதிர்ச்சி..!
14 678 contract employees resign in a single day in Chhattisgarh
சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, செயல்படும் தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் தரமான மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
குறித்த இயக்கத்தின் கீழ் டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட 16,000-க்கும் அதிகமான ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி, அரசுக்கு எதிராக கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன்காரணகம ஊழியர்கள் பற்றாக்குறை நிலவியதால் அரசு மருத்துவமனைகள் வெறிச்சோடியுள்ளன. அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுடன் அரசு தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. அதன்படி, அவர்களின் 10 கோரிக்கைகளில், நான்கு கோரிக்கைகளை ஏற்ற அரசு, ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தியது. இருப்பினும், ஒப்பந்த ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தை முன்னின்று நடத்திய தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் சங்க தலைவர் டாக்டர் அமித்குமார் மிரி, பொதுச்செயலாளர் கவுஷ்லேஷ் திவாரி உட்பட 25 பேரை, கடந்த 03-ஆம் தேதி மாநில அரசு பணிநீக்கம் செய்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த ஊழியர்கள், 14,678 பேர் நேற்று ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
English Summary
14 678 contract employees resign in a single day in Chhattisgarh