பிளான் போட்டு குடுத்த பாஜக! ஆட்டத்தை தொடங்கிய செங்கோட்டையன்! வார்த்தையைவிட்டு மாட்டிக்கொண்ட நயினார் நாகேந்திரன்! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்களை (ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா) மீண்டும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். “10 நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன்; இல்லையெனில், அவர்களுடன் சேர்ந்து நான் முயற்சி எடுப்பேன்” என்ற அவரது எச்சரிக்கை அதிமுகவுக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து தற்போது அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. “அனைவரும் ஒன்று சேர்ந்தால் நல்லது தானே” என்ற அவரது பதில், பாஜக செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

பத்திரிகையாளர் ப்ரியன் இதுகுறித்து கூறியதாவது:எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும்; நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் இணைக்க முடியாது என்பதே அவர் பலமுறை கூறிய கருத்து.

ஆனால், செங்கோட்டையன் பேச்சுக்குப் பிறகு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் “அனைவரும் சேர வேண்டும்” என்று கூறியிருப்பது, பாஜக நேரடியாக செங்கோட்டையனை பயன்படுத்துகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் தமிழக வாக்கு கணக்குகள் இதை வெளிப்படுத்துகின்றன.மொத்த வாக்குகள்: சுமார் 1 கோடி,பாஜக கூட்டணி: 23 லட்சம்,அதிமுக கூட்டணி: 18 லட்சம்,திமுக கூட்டணி: 55 லட்சம்தனித்தனியாக பார்த்தால், அதிமுக – பாஜக தலா 10 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றன.

இதனால், “அதிமுக பலவீனமாக இருப்பது தெளிவாகிறது. முதலில் அந்த பலவீனத்தை ஏற்றுக்கொள்வதே அதைக் களைய வழி” என ப்ரியன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டை மாற்றும் அறிகுறி காட்டாத நிலையில், மறுபுறம் செங்கோட்டையனின் எச்சரிக்கை மற்றும் பாஜக தலைவரின் கருத்து இணைந்து, அதிமுக – பாஜக உறவுகளில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP came up with a plan and screwed up Sengottaiyan started the game Nayinar Nagendran got caught behind his word


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->