சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணி: புதிய படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்..!
A famous company is producing the new film starring Sivakarthikeyan and Venkat Prabhu
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிறியவர் முதல் பெரியவர் அவர் இவரை கொடுக்கின்றனர். தற்போது ஏ .ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இவரது நடிப்பில் இன்று மதராஸி திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. சிவா இந்த படத்தினை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில்' பராசக்தி' என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இப்படம் ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் இதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ''தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'' (கோட்) படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர்களின் கூட்டணியில் உருவாகவுள்ள படம் தொடர்பான அப்டேட்டை தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் கொடுத்துள்ளார். அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபு இணையும் புதிய படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
English Summary
A famous company is producing the new film starring Sivakarthikeyan and Venkat Prabhu