பணத்தை வீணாக்குவதாக ஆத்திரம்: மார்க்கெட்டில் வைத்து மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்..!
Husband shoots wife to death in market after being angry over her husbands money being wasted
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் 34 வயதான, விஸ்வகர்மா சவுகான். இவரது மனைவி மம்தா சவுகான், 32 வயது. குறித்த தம்பதிக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளநிலையில்,குடும்ப தகராறு காரணமாக மம்தா, கணவரை பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
அத்துடன், விவாகரத்து கோரி மம்தா மனு தாக்கல் செய்திருந்ததோடு, குழந்தையை கவனித்துக் கொள்ள கணவனிடம் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் கணவன் மனைவி இருவருக்கும் நீண்ட நாட்களாக பிரச்சினை நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று மம்தா மார்க்கெட் பகுதிக்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவரை கணவர் விஸ்வகர்மா சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விஸ்வகர்மா, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மம்தாவை சுட்டுத் தள்ளியுள்ளார்.
இதில் மம்தா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடனடியா வந்து, மம்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் கணவன் விஸ்வகர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மம்தா தனது பணத்தை தொடர்ந்து அழித்துக்கொண்டிருந்ததாகவும், அவரை கொலை செய்ததற்காக கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை என்றும் விஸ்வகர்மா அதிரடியாக கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் குறித்த மார்க்கெட் பத்தியில் பதற்றம் நிலவியது.
English Summary
Husband shoots wife to death in market after being angry over her husbands money being wasted