இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சச்சின் தெண்டுல்கர்? விரைவில் அறிவிப்பு!
BCCI head SachinTendulkar
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிய ரோஜர் பின்னி சமீபத்தில் 70 வயதை நிறைவு செய்தார். பி.சி.சி.ஐ விதிகளின்படி, 70 வயதைக் கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் தொடர முடியாது என்பதால் அவர் தனது பொறுப்பிலிருந்து விலகினார்.
அவரது ராஜினாமையைத் தொடர்ந்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இதேசமயம், புதிய நிரந்தர தலைவரைத் தேர்வு செய்வதில் பி.சி.சி.ஐ தீவிரமாக செயல்படுகிறது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த வீரர்களில் ஒருவரான சச்சின் தெண்டுல்கர் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரின்போது சச்சின் தெண்டுல்கருடன் பி.சி.சி.ஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனையில் தலைவராக பொறுப்பேற்க சச்சின் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சச்சின் தெண்டுல்கர் இந்திய அணிக்காக 200 டெஸ்ட், 463 ஒருநாள், 1 டி20 போட்டிகளில் விளையாடி உலக சாதனைகள் படைத்தவர். தற்போது ராஜ்யசபா உறுப்பினராகவும் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வரும் அவர், இந்திய கிரிக்கெட்டின் புதிய நிர்வாகத் தலைவராக வருவதை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி உள்ளனர்.
சச்சின் நியமனம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
BCCI head SachinTendulkar