டிரம்புக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி; ஐநா பொதுச் சபை கூட்டத்தை பிரதமர் மோடி தவிர்ப்பு; காரணம் என்ன..?
Prime Minister Modi skips UN General Assembly meeting
ஐநா சபையில் 80-வது பொதுச்சபைக் கூட்டம் செப்டம்பர் 09-ஆம் தேதி நியுயார்க்கில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல், அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கவுள்ளார். இந்த கூட்டத்தில் முதல் பாரம்பரிய பேச்சாளரான பிரேசில் தலைவர் உரையாடலை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுவார். செப்டம்பர் 23-ஆம் தேதி அவர் பேசவுள்ளார்.
தற்போது, இந்தியா அமெரிக்காவின் வரி விதிப்பால் அந்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றால் அங்கு டிரம்பை சந்திக்க நேரிடும். அத்துடன், வரி விதிப்பு விவகாரத்தில் இன்னமும் இரு நாடுகளுக்குமிடையில் தீர்வு காணப்படாத நிலையில், பிரதமர் மோடி ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமரின் பயணத்திட்ட அட்டவணையில் தற்போது வரை ஐநா சபை பொதுக்கூட்டம் இடம்பெறவில்லை. தற்போதுள்ள அரசியல் சூழலில், இந்த சந்திப்பை தவிப்பது நல்லது என்று மத்திய அரசு கருதுவதாக கூறப்படுகிறது.
ஆகவே, பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் பிரதிநிதியாக ஐநா பொதுச் சபைக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துவார் என்று கூறப்படுகிறது. இவர், வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Prime Minister Modi skips UN General Assembly meeting