செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறாரா? இபிஎஸ் தீவிர ஆலோசனை!
Edappadi Palaniswami ADMK Sengottaiyan issue
அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.
இந்த கெடுவைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பிரசாரப் பயணத்தில் இருக்கும் அவர் திண்டுக்கலில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருப்பதாகவும், அங்கு முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையில் எஸ்.பி. வேலுமணி, முனுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று, கட்சியின் எதிர்கால திசை, பிரிந்த தலைவர்களை மீண்டும் அணிக்கு இணைப்பதற்கான வழிகள் போன்ற அம்சங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, அதிமுக வலிமையடைய அனைத்து பிரிவினர்களும் ஒன்றிணைய வேண்டும் என்பது மூத்த தலைவர்களின் விருப்பமாகும்.
செங்கோட்டையன் விதித்த நேரக்கெடு, எடப்பாடி பழனிசாமி மீது கூடுதல் அழுத்தமாக மாறியுள்ளது. இதன் மூலம், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எவ்வாறு முடிவு எடுக்க போகிறார்? என்பது அதிமுகவினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.
English Summary
Edappadi Palaniswami ADMK Sengottaiyan issue