கூட்டணி உடைய நயினார் தான் காரணம்.. அண்ணாமலை சொல்லி தான்... டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!
BJP AMMK Alliance break TTV Dhinakaran open talk
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அதிமுக அரசியல் நிலைமை மற்றும் கூட்டணி குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அதிமுகவில் இருந்து பிரிந்து இருக்கும் அணிகளை மீண்டும் ஒன்றிணைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆர்வம் காட்டி முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால் தேவையின்றி யாரையும் சந்திக்கும் நிலை எனக்கில்லை. கூட்டணி தொடர்பான முடிவுகளை டிசம்பர் மாதத்தில் அறிவிப்போம்.
நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறியது திடீர் முடிவு அல்ல, ஆழ்ந்த யோசனைக்குப் பிறகே எடுத்த முடிவு. அமமுகவை சிறிய கட்சியாகவே நயினார் நாகேந்திரன் நினைத்திருக்கலாம். ஆனால் கூட்டணியைச் சரியாக நடத்தும் அனுபவம் அவருக்கு இல்லை என்பதும் வெளிப்படுகிறது. எனக்கு பின்னால் அண்ணாமலை இருப்பதாக சொல்வதில் உண்மையில்லை. அவர் சொல்லித்தான் நாங்கள் கூட்டணிக்கே வந்தோம்.அவர் நீக்கம் எங்களுக்கு வருத்தமே. கூட்டணிக்கு சிறந்த தலைவராக அண்ணாமலை இருந்தார்.
மேலும், விஜயுடன் கூட்டணி அமைப்போம் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. தேர்தலில் அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றே குறிப்பிட்டேன். அதைக் கூட்டணியாக சிலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.
அதிமுக சார்ந்த ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பதில் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. எங்கள் நோக்கம் தெளிவான அரசியல் பாதையில் செல்லும் என்பதுதான்.
English Summary
BJP AMMK Alliance break TTV Dhinakaran open talk