10 நாளில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை! ஒரே கடையில் ரூ.1.46 கோடிக்கு மது விற்பனை! தமிழர்களை மிஞ்சிய மலையாளிகள்!
kerala onam liquor sale report
கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற ஓணம் விழாவில் மதுபான விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த ஆண்டு ஓணம் காலத்தில் மட்டும் ரூ.826 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.776 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த முறை ரூ.50 கோடி அதிகமாக விற்பனை ஆனது.
ஓணம் பண்டிகைக்கு முந்தைய உத்திராட நாளில் மட்டுமே ரூ.137 கோடி மதுபானம் விற்பனையானது. கடந்த ஆண்டு அந்த நாளில் ரூ.126 கோடிக்கு விற்பனை நடைபெற்றதை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.11 கோடி மதுபானம் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த இரண்டு நாட்களில் மாநிலம் முழுவதும் 6 சில்லறை மதுபான கடைகளில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக விற்பனை நடைபெற்றது. அவற்றில் 3 கடைகள் கொல்லம் மாவட்டத்தில் உள்ளன. கருணாகப்பள்ளி பகுதியில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை நிலையத்தில் ரூ.1.46 கோடிக்கு மது விற்பனையானது. இது மாநிலத்தில் அதிகமாக விற்பனையான கடையாகும்.
அதனைத் தொடர்ந்து, கொல்லம் காவநாடு கடையில் ரூ.1.24 கோடிக்கும், மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா எடப்பால் குற்றிப்பாலா கடையில் ரூ.1.11 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. திருச்சூர் மாவட்டம் சாலக்குடி கடையில் ரூ.1.07 கோடி, இரிஞ்சாலகுடாவில் ரூ.1.03 கோடி, கொல்லம் குண்டரா பகுதியில் உள்ள கடையில் ரூ.1 கோடி மதுபான விற்பனை நடைபெற்றதாக கேரள அரசு மதுபான விற்பனை கழகம் அறிவித்துள்ளது.
English Summary
kerala onam liquor sale report